, ,

150 புதிய பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்..!

TNSTC
Spread the love

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு வரப்பெற்றன. இவற்றை சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் ஏறி பார்வையிட்டு ஆய்வும் செய்தார்.இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், மு.சண்முகம், சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.