கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினர்.
கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ரூ.25,000/- மற்றும் கவுன்சிலர் சிங்கை மு.சிவா ரூ.25,000/- நிதி வழங்கினார். மாமன்ற உறுப்பினர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.25,000/-, ஜி.வி. நவீன் குமார் (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.15,000/-, ர.பூபதி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ரூ.10,000/-, எஸ். பாக்கியம் (கொங்குநாடு கட்சி) ரூ.10,000/-, த. தர்மராஜ் (மதிமுக) ரூ.10,000/- வழங்கினர். மேலும், திமுக மாமன்ற உறுப்பினர்கள் எஸ். பொன்னுசாமி எம். கோவிந்தராஜ், கே விஜயகுமார், பெ. சரஸ்வதி மு. கோவை பாபு செல்வகுமார் கே. மணியன், ப. சாந்தாமணி மற்றும் டி.ஆதிமகேஸ்வரி ஆகியோர் தலா ரூ.10,000/- வழங்கினர்
Leave a Reply