கோவையில் வெவ்வேறு இடங்களில் 800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சாயிபாபா காலனி போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது வடகோவை கூட்ஷெட் ரோட்டில் சந்தேகம்படும் படி, நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது, அவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 800 போதை மாத்திரை, 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் வெவ்வேறு இடங்களில் 800 போதை மாத்திரைகளை பறிமுதல்…..

Leave a Reply