, ,

மருத்துவ சேவையே மக்கள் சேவை கே.ஜி.எம் மருத்துவமனை வெள்ளி விழா கோமகன் – டாக்டர் என்.எஸ்.குமரேசன்

kgm hospital
Spread the love

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்”
நோய் இன்னது என்று ஆராய்ந்து, அதன் காரணத்தைத் தெரிந்து, நோயினைப் போக்கும் வழியை, உடலுக்கு தகுந்தவாறு செய்ய வேண்டும் என வள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது கூற்றுப்படி கோவை கே. ஜி.எம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் டாக்டர் என்.எஸ்.குமரேசன் 1987-ம் ஆண்டில் கே.ஜி.எம். கிளினிக்கை தொடங்கினார்.
டாக்டர் குமரேசன் தன்னை நாடி சிகிச்சை பெற வருபோரிடம் கனிவான பேச்சு, எளிமையான சிகிச்சை, விரைவில் குண மாதல், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியில் உள்ளோரின், நன்மதிப்பினை பெற்றார்.
அதனால் 1999-ம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையத்தில் கே.ஜி.எம். மருத்துவமனை 25 படுக்கை வசதிகளுடன் உருவானது. கே.ஜி.எம் மருத்துவமனையினை கோவையில் புகழ் பெற்ற, கே.எம்.சி. ஹெச் மருத்துவ மனை தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி யின் திருக்கரங்களால் தொடங்கி வைக்கப் பட்டது.
கே.ஜி.எம். மருத்துவமனையின் நிர் வாக இயக்குனராக டாக்டர் என்.எஸ். குமரேசன் பொறுப்பினை ஏற்றார். அவரது துணைவியார் டாக்டர் கே.சுமதி மருத்துவமனை இயக்குனராகவும்,டாக்டர் குமரேசனின் சகோதரர் டாக்டர் என்.எஸ். தங்க வேல் மற்றொரு இயக்குன ராகவும் பொறுப்பினை ஏற்று மருத்துவமனை வளர்ச்சிக்கு உற்ற துணையாக விளங்கு கின்றனர்.
கே ஜி எம் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவு (ICU ), விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மகளிர் நலன், மகப்பேறு, கருத்தரித்தல் மையம், இருதய நோய், காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் தொடர்பான சிகிச்சைகள் எலும்பு மருத்துவம், தோல் நோய் பிரிவு, நரம்பியல் துறை, புற்று நோய்,சிறு நீரகம், சர்க்கரை நோய், அதனால் ஏற்படும் ஆறாத கால் புண் சிறப்பு சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முதுகு தண்டு வட அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும், மிகச் சிறப்பான முறை யில்,சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அதற்குரிய சிறப்பு மருத்துவ நிபுணர்கள், சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள்,தேவையான நவீன உப கரணங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு விபத்து மற்றும் உயிருக்கு ஆபத்தான சிகிச்சைகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்
அனுபவம் வாய்ந்த 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களால், விரைவான முறையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நவீனமான 100 படுக்கைகளைக் கொண்ட, கே. ஜி. எம். மருத்துவமனையில் அதி நவீன ஸ்கேன் கருவிகளும்,நவீன ஆய்வகங்கள், அதில் தேர்ச்சி பெற்ற ஆய்வக பணியாளர்கள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகியவைகளுடன் நுண்ணிய முறையில் லேப்ராப்ஸகோப் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து வித அறுவை சிகிச்சைகளும் மிகக் குறைந்த கட்டணத் தில் கடந்த 25 ஆண்டு காலமாக தரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில், அங்கு நிகழும் விபத்துக்களுக்கு இங்கு உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கை காயங்களுக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சின்னியம் பாளையம் கே .ஜி. எம். மருத்துவமனையை சுற்றிலும் கிராமங்கள் அதிகமாக உள்ளன. இங்கு வசிப்போர். தொடர்ந்து பல ஆண்டு காலமாக இங்கு தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் மிகச் சிறந்த “நம்பிக்கை” மருத்துவமனையாக கே.ஜி.எம் திகழ்ந்து வருவதால், குடும்பத்தில் உள்ள அனைவருமே கே.ஜி.எம். மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் தேறி மகிழ்ச்சியாக வீடு திரும்புகின்றனர்.இம்மருத்துவமனையில் முதலமைச் சரின் காப்பீட்டு திட்டம்,அனைத்து தனியார் காப்பீட்டு திட்டங்களிலும் சிகிச்சைகளும், அறுவை சிகிச்சை
களும் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மருத்துவமனையாக கேஜிஎம் விளங்குவதால், நடுத்தர வர்க்கத்தினர் நாடி வந்து சிகிச்சை பெற்று செல்வதை காண முடிகிறது. கே ஜி எம் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து நடை
பெற்று வருகிறது. மாதம்
ஒரு முறை ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் இந்த இலவச மருத்துவ முகாமில், மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாமில் பங்கேற்றோருக்கு தொடர் சிகிச்சையும், தேவைப்
பட்டால் அறுவை சிகிச்சையும் மிகக் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான டாக்டர்.என் எஸ் குமரேசனின் சொந்த கிராமமான கோபி, நாதிபாளையத்தில் மாதம் ஒரு முறை இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் பலர் பங்கேற்று, பயனடைந்து வருகின்றனர்.

வெள்ளி விழா
கே.ஜி.எம் மருத்துவமனையின் 25வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.
கே எம் சி ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி,கே ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி. பக்தவச்சலம் ,முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர். ரவி , ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், பேராசிரியர் டாக்டர் சதாசிவம், சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வரும், மருத்துவர்கள், பொது மக்கள், வாடிக்கையாளர்கள் ,மருத்துவப் பிரதிநிதிகள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வெற்றிகரமான 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா தருணத்தில் உளமாற நன்றியை கே ஜி எம் நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். வெள்ளி விழாவிற்கான ஏற்பாடுகளை கேஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.

அவிரம்
நிர்வாக இயக்குனர் டாக்டர் குமரேசனின் மூத்த மகள் எஸ். கே .சரண்யா தீபக் மகளிர் மேற்படிப்பை முடித்த இவர், “அவிரம்” என்ற பெயரில் கே ஜி எம் – யில் கருத்தரித்தல் மையம் ஏற்படுத்தி உள்ளார். இங்கு அதி நவீன கருவிகளுடன் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே இவரது ஆவல். மேலும் மகப்பேறு மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சையும், இயற்கையான பிரசவம்,சிக்கலான பிரசவங்களையும் கவனித்து வருகிறார்.

குடும்ப மருத்துவமனை
மருத்துவமனை எலும்பு சிகிச்சை பிரிவில், விபத்து மற்றும் எலும்பு முறிவு, மூட்டு மாற்று, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை ஆகியவற்றை திறம்பட செய்து நிர்வகித்து வருகிறார் டாக்டர் எஸ்.தீபக். கே.ஜி.எம். மருத்துவமனையில் தொடர்ந்து 30 ஆண்டு காலமாக சிகிச்சைக்கு வருவோர், அவரது மகன், மகள் மற்றும் பேரன் பேத்திகள் என இங்கு தான் வருகின்றனர். தொடர்ந்து மூன்றாம் தலை முறையினர் வருவதற்கு, டாக்டரின் கைராசி என பெருமையுடன் கூறுகின்றனர். நோயாளிகளை மருத்துவர்கள் தொடர்ந்து நேரடி கண்காணிப்பில் இருப்பதால், அவர்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் மருத்துவமனையாக திகழ்கிறது.

விவசாய குடும்பம்
ஈரோடு மாவட்டம் கோபி, நாதிபாளையம் விவசாயி என். கே .சுப்ரமணியம் – எஸ் ராஜம்மாள் தம்பதியரின் மூத்த மகன் டாக்டர் என்.எஸ்.குமரேசன். மருத்துவம் படித்து ஏழை எளியவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இவரது இளம் வயது இலக்கு. பள்ளி படிப்பை கோபி பகுதியிலும் மருத்துவ படிப்பினை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றவர். பொது அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் என் எஸ் குமரேசன், ஏராளமான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டவர். அகில இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்.இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ கருத்தரங்குகளில் பங்கேற்று உள்ளார். கேஜி விருது, இந்து நாளிதழ் விருது, நேரு கல்லூரி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.
இவரது துணைவியார் டாக்டர் கே.சுமதி, மகப்பேறு மருத்துவர் நிபுணரான இவர் கே. ஜி.எம். மருத்துவமனையில் இயக்குனராக உள்ளார். இவரது சகோதரர் டாக்டர் என்.எஸ்.தங்கவேல். மயக்கவியல் மற்றும் நீரழிவு நோய் நிபுணர். கே.ஜி.எம். மருத்துவமனை இயக்குனர்களில் இவரும் ஒருவர். டாக்டர் என்.எஸ். குமரேசனின் மருமகன் டாக்டர் எஸ். தீபக். ஆர்த்தோ மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணராவார். மூத்த மகள் டாக்டர் எஸ்.கே.சரண்யா தீபக். மகளிர் மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்.
இளைய மகள் டாக்டர் அபிநிதா, இங்கிலாந்தில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வருகிறார்.
டாக்டர் குமரேசன் மருத்துவரானதை தொடர்ந்து, இவரது குடும்ப உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவர்களாக உள்ளனர்.