கோவை மாநகராட் சிக்கு சிறந்த சிறந்த மாநகராட்சிக்கான விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 78 ஆம் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடி யேற்றி விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக் கான முதலமைச்சர் விருது கள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாநகராட்சிக்கான விருது கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கோவை மேயர் ரங்கநாயகி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இதில் முதலிடத்திற்கான சான்றிதழுடன் ரூ.50 லட்சம் ஊக்க தொகையும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், “கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளில் முனைப்போடு செயல்படுத்தியதற்கான பாராட்டாக இதை பார்ப்பதாக ஆணையர் கூறினார். இது கோவை மாநகராட்சியின் களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளின் உழைப்புகள் கிடைத்த ஒரு அங்கீகாரம் இது. கோவை மாநகராட்சியில் பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை முன்னெடுத்து பொது கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அடுத்த இலக்கை அடைய குறிக்கோள்கள் உள்ளன. கோவை மாநகராட்சியை அடுத்தடுத்து கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உழைப்போம். அரசு கொடுத்து ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை கொண்டு குழந்தைகளுக் கான திட்டங்களை முன்னெடுக்க விருப்பம் உள்ளது என்றாலும் இது குறித்து மேயர், துணை மேயர் மற்றும் கோவை மாநகராட்சியின் கவுன்சிலுடன் பேசி என்ன பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்படுகிறது என்று அதுபற்றி முடிவு எடுத்து பணிகள் சிறப்பாக முன்னெடுக்க முயல்வோம். என்று பேசினார். மேலும் சிறந்த பேரூராட்சிக்கான விருது கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கோவை மாநகராட்சிக்கான விருதை முதல்வர் வழங்கினார்………



Leave a Reply