, , , ,

சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை

madhurai
Spread the love

மதுரை அருகே, சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், கிணற்று பாசனம் மூலம் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. சோழவந்தான் அருகே இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பேட்டை மற்றும் சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் 100-க்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்துள்ளனர். ஒரு வாரத்தில் இந்த நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நேரத்தில் மூன்று நாட்கள் பலத்த காற்று இடி மின்னலுடன் மழைபெய்ததில் நெற்கதிர்கள் பெரும்பாலானவை வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர். ஏனென்றால், ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரத்தில் முதல் போக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து இதன்பின் விவசாயம் நடைபெறும். கிணறு வைத்துள்ள சில விவசாயிகள் இதற்கு முன்பாகவே விவசாயம் செய்து நெல் அறுவடை செய்வது வழக்கம். இதுபோல இந்த ஆண்டு இரும்பாடி பால கிருஷ்ணாபுரம், சோழவந்தான், நாச்சிகுளம் ரோடு ஆகிய பகுதிகளில் கிணறு மூலம் நெல் விவசாயம் செய்துள்ளனர். தற்போது, பலத்த காற்றுடன் வீசிய கனமழையால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்து அறுவடைக்கு காத்திருக்கிறது. இதில் 30 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து சேத மடைந்துள்ளது. சேதம் அடைந்த நெற்கதிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, சாய்ந்து கிடக்கும் நெற்கதிர் உள்ள நிலங்களை விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர். ஏனென்றால், சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களை அறுவடை செய்த வயல் என்று கால்நடைகள் இறங்கி தின்றுவிடும் என்று கூறுகின்றனர். மேலும், சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.