, ,

சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும்  கிராமசபை கூட்டம் – தமிழக அரசு உத்தரவு

ஆகஸ்ட்
Spread the love

ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும்  கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றிசுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் குடியரசு தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்  என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்று  காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில், ஆட்சியர்கள்  பங்கேற்கும் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.