, ,

வெள்ளலூரில் பட்டாம்பூச்சி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது……

வெள்ளலூர்
Spread the love

கோவை வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி பூங்கா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.குளக்கரையை ஒட்டி இந்த பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டாம்பூச்சி பூங்காவில் 103 வகையான பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 31% பட்டாம்பூச்சிகள் இப்பகுதியில் உள்ளது. இந்த பூங்காவில் 18 அடி உயர பட்டாம்பூச்சி வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு பட்டாம்பூச்சிகள் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நீர் மேலாண்மைக்காக செய்த பல்வேறு குறிப்புகளும் ஓவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன.