, ,

வினேஷ் போகத்துக்கு சிறுவயது பயிற்சியாளர், ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்…

sports
Spread the love

வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அவரது நெருங்கிய உறவினரும், சிறு வயது பயிற்சியாளருமான மஹாவீர் போகத் வலியுறுத்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடும் செய்துள்ளார். எனினும், மேல்முறையீடு முடிவு வெளியாகும் முன்னதாக, தனது ஓய்வு முடிவை வினேஷ் போகத் அறிவித்தார்.