கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 68 வது வட்டத்தில் கர்மவீரர் காமராஜரின்் 122 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் வக்கீல் செந்தில் குமார் தலைமை வகித்தார். கோவை மாநகர் மாவட்ட காங்கிர ஸ் கமிட்டி பொறுப்பாளர் சங்கனூர் ஸ்ரீதரன், ஆர் கே ரவி, கோவை பட்டீஸ்வரன் கோயில் அறங்காவலர் ராம நாகராஜ், அரிமா வெற்றிலை கருப்புசாமி, அரிமா கே என் ஆறுமுகம், கணபதி அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக 74 வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஏ எஸ் சங்கர் கலந்து கொண்டார்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா

Leave a Reply