‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் திரு. எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை மாண்புமிகு அம்மா அவர்களே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து இருக்கிறார்கள். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக இராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய மாண்புமிகு அம்மா அவர்களின் பேச்சினை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். மாண்புமிகு அம்மா அவர்களே என்னுடைய விசுவாசத்தை இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப் பற்றி பேச ‘பத்துத் தோல்வி’ பழனிசாமிக்கு தகுதியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் திரு. எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர் என ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2026ல் அதிமுக ஆட்சியமைக்கதலைமை மாற்றப்பட வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை



Leave a Reply