நீட் தேர்வைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து இன்று திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு அமல்படுத்தி உள்ள தேசிய நுழைவு தேர்வுகளான, CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் ஆலந்தூர் பாரதி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்றது. அப்போது, மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இநத் . ஆர்ப்பார்ட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றுள்ளனர்.
நீட் தேர்வைக் கண்டித்து திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம் . . . . . !

Leave a Reply