இன்று 2வது நாளாக மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி பரிசளித்து பாராட்டி பேசினார் நடிகர் விஜய்.
நேற்று இரவு சென்னை திருவான்மையூரில் உள்ள ராமசந்திரா கான்வென்ஷன் செண்டரில் முழு வீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருந்தது. தமிழகம் முழுவதும் இருந்தும் 10, +2 மாணவர்கள் ஆர்வமுடன் பெற்றோர்களுடன் வந்து குவிந்தனர்.
அப்போது பேசிய விஜய் விஜய் நீட் விலக்கு தீர்மனதிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும்…நீட் மாநில உரிமைக்கு எதிராக உள்ளதாகவும் கூரினார் .
சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நீட் தேர்வு குறித்து பேசி உள்ளார். நீட் தேர்வால் தமிழக கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. நீட் மாநில உரிமைக்கு எதிராக உள்ளது என்றும் கூறினார்.
Leave a Reply