கோவை மாநகரம் வளர்ச்சி அடைந்த நகரம்.
தென்னிந்திய அளவில் மூன்றாவது பெரிய நகரமாகவும், தமிழக அளவில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கி வருகிறது.
சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஆலைகள் உள்ள கோவை மாநகரில், தென்னிந்தியை ஜவுளி துறையின் ஆராய்ச்சி உள்ளது. கோவையில் தரமான பருத்தி மற்றும் ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச கல்லூரி மற்றும் பருத்தி ஆராய்ச்சி மையமும் கோவையில் செயல்பட்டு வருகிறது. கோவையில் உள்ள டைடல் பூங்காவில், பல தொழில் நுட்ப நிறுவனங்கள் இயங்கிக் கொண்டுள்ளன. மின் மோட்டார்கள் தயாரிக்கும் ஆலைகள் இங்கு அதிகமாக உள்ளன. கல்வி நிறுவனங்களும், இந்திய அளவில் தரமான மருத்துவ மனைகளும் கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.
தொழில் மாநகரமாக பிரதானமாக விளங்கி வரும் கோவையில் வளர்ச்சிக்கு ஏற்ப, கோவை மாநகராட்சி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இது குறித்து திமுக தரப்பினர் கூறுகையில், கோவை மாநகராட்சி தொடங்க
ப்பட்டது முதல், திமுகவைச் சேர்ந்த யாரும் மேயர் பதவிக்கு வரவில்லை . பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட மேயர் பதவியில், எளிய குடும்ப பின்னணியில் உள்ளவரை மேயர் பதவியில்,அமர்த்த வேண்டும் என தலைமை முடிவு செய்து, சென்னை,மதுரை கோவை ஆகிய மாநகராட்சிகளில் மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்தவர்களை மேயர் ஆக்கினர்.
கோவையில் கல்பனா ஆனந்தகுமார் மேயர் பதவி என அறிவிக்கப்பட்டது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் எந்தவித முன் அனுபவமும் இல்லாத, கல்பனா தனது கணவருடன் சேர்ந்து, இ – சேவை மையத்தை நடத்தி வந்தவர்.
மூன்று தலைமுறைகளாக திமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தகுதி மட்டும் கொண்டவராக இருந்த கல்பனாவை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பெயரில் தலைமை மேயர் ஆகியது. ஆனால் அந்த பதவிக்கு உரிய தகுதியினையும், ஆளுமையினையும் வளர்த்துக் கொள்ள தவறி விட்டார் என்பதே பலருக்கு வருத்தமாக உள்ளது.
மேலும் அவரது கணவர் ஆனந்தகுமார்,குறித்த ஆடியோ
க்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரது தம்பி, குடியிருந்த இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையும் பேசு பொருளானது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே. என். நேரு ,கோவை மாநகராட்சி வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய போது, அமைச்சர், மாநகராட்சி தரவுகள் குறித்து மேயரிடம் கேட்ட போது அவருக்கு பதில் சொல்ல தெரியாதது, அதிகாரிகள் மத்தியில் மட்டுமின்றி, ஆளும் திமுகவினர் இடையேயும் முகம் சுழிக்க வைத்த சம்பவங்கள் அரங்கேறின.
மேலும் பல இடங்களில் மேயருக்கும் மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பகிரங்
கமாகவே மோதல் நடந்து
ள்ளது. இவைகள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபர
ப்பை ஏற்படுத்தின.
மேலும் திமுக சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மேயரை பார்ப்பதே அபூர்வமாக உள்ளது. இது போன்ற புகார்கள் கட்சியின் தலைமைக்கு சென்ற வண்ணம் உள்ளன என தெரிவித்தனர்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மேயரின் சொந்த வார்டான 19 வார்டில்,பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3 ஆயிரத்து 985 ஓட்டுக்களை பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற திமுக எம்பி ஆன கணபதி ராஜ்குமார் 3 ஆயிரத்து 655 ஓட்டுக்களை மட்டுமே பெற முடிந்தது. 330 ஓட்டுக்கள் பாஜக வேட்பாளர் அதிகமாக பெற்றிருந்தார்.
தற்போது மாநகராட்சி குறித்த கோப்புக்கள் மேயர் கல்பனாவிடம் செல்வதில்லை என கூறப்படுகிறது.
வாரந்தோறும் செவ்வாய்க்
கிழமைகளில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டங்களில், பெயருக்கு மேயர் வந்து செல்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மனுதாரர்களிடம் ,மேயர் கல்பனாவே,புதிய மேயர் வந்து உங்களது குறைகளை தீர்ப்பார் என பகிரங்கமாகவே பேசி வருகிறார்.
இதனால் கோவை மாநகராட்சி மேயர் மாற்றப்படுவது உறுதியாக தெரிகிறது.
கோவை மேயர் மாற்றம் : திமுக தலைமை திட்டம்?



Leave a Reply