,

தமிழக அரசின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கிடைத்த வெற்றி இது – கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

CM Stalin
Spread the love
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றிக்கு வித்திட்ட திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழாவாக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் , “கடந்த முறை கோவைக்கு வந்து பங்கேற்ற கூட்டம் இந்தியா முழுவதும் ட்ரெண்டானது. கூட்டத்திற்கு வந்த ராகுல் ஓர் இனிப்பை கொடுத்து மனதை வென்றார். அவரை மறக்க முடியாது.

இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல. அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் நடத்தப்படும் பாராட்டு விழா இது. இந்தப் பாராட்டு விழாவை தொண்டர்களாகிய உங்களுக்கு காணிக்கையாக வழங்குகிறேன். தமிழக அரசின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கிடைத்த வெற்றி இது.

பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என ஊடகங்கள் கூறிய கருத்துக்கணிப்பை  உடைத்து நாம் தமிழகத்தில் 40க்கு 40 வென்றுள்ளோம்.” என்று பேசினார்