கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை சார்பாக இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் , எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர் அல்லிராணி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார்
இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் பெங்களூரு , எம்பிடெல் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர், முன்னாள் மாணவர் திரு. திலீப் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் .
எலக்ட்ரிக் வாகன சிறப்புப் பொறுப்பாளர் டாக்டர்.ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் குழுவினர் மின்-மொபிலிட்டிக்கான சிறப்பு மையத்தில் நிறுவப்பட்டுள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பு மற்றும் வாகனக் கட்டுப்பாட்டுப் பிரிவைக் விளக்கினார். பேராசிரியர் ஆர். சண்முகசுந்தரம், மற்றும் குழுவினர், இ-சைக்கிளுக்கான பவர் கன்ட்ரோலரின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுடன் கூடிய திட்டத்தை செயல்விளக்கம் செய்தனர்.
இக்கல்லூரி, வளர்ந்து வரும் இ-மொபிலிட்டி துறையில் திறமையான மனிதவளத்தின் அவசியத்தை உணர்த்த, ஆட்டோமோட்டிவ் துறையில் முன்னோடியான மஹிந்திரா டெக்னிக்கல் அகாடமி மற்றும் ஸ்மார்ட் இ-மொபிலிட்டிக்கான சொசைட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு மையமானது, பசுமை இயக்கத்திற்கான ஆராய்ச்சி, புதுமை, திறன்மேம்பாடு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் பொறியியல் மாணவர்கள் மற்றும் வல்லுநர்களின் ஆர்வத்தை உருவாக்குதல். ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களில் மாசுபாட்டைக் குறைப்பதற்கும். சுற்றுச்சூழலில் வாகனங்களால் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைப்பதற்கும். உற்பத்தி திறன்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி லட்சுமி நாராயணசுவாமி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். துணை முதல்வர் கருப்பசாமி, துறைத்தலைவர்கள், கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
Leave a Reply