செவிலியர்களின் முன்னோடியாக திகழந்த பிளாரன்ஸ் நேட்டிங்கேல் பிறந்தநாளான மே 12ம் தேதி செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடமும் செவிலியர் தினம் அனைத்து மருத்துவமனைகளிலும், செவிலியர் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணி குறித்தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒன்றாக சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி செவிலியர் தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்வில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா வும் கலந்து கொண்டு செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு செவிலியர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.
நடனமாடி செவிலியர் தினத்தை கொண்டாடிய கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள்

Leave a Reply