தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும் வெப்ப அலை வீசுவதாலும் கோடை விடுமுறையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் கேரளா மாநிலத்தின் சுற்றுலாதலமான ஆனைகட்டி மற்றும் அட்டப்பாடி பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். வெயிலின் தாக்கத்தை குறைக்க அங்குள்ள ஆறுகளுக்கு சென்று தங்களை குளிர்விக்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசு அடைவதால் இந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் குளிக்க கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என்றும் குளிப்பவர்களுக்கு 10,000 முதல் 50,000 வரை அபராதத் தொகையும் மற்றும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்துடன் கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Reply