கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளை சென்னையில் அண்மையில் நடத்தியது. இப்போட்டிகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.காம் கணக்கியல் மற்றும் நிதித்துறை முதலாமாண்டு மாணவி எம்.பி.ஜோசினி வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். தகுதிச்சுற்று உட்பட 3 பிரிவுகளாக நடந்த மூன்று போட்டிகளிலும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம் மாணவி எம்.பி. ஜோசினி ஆந்திராவில் வருகின்ற ஜனவரி மாதம் இந்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் கூட்டமைப்பு நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அளவில் இருந்து தேசிய போட்டிகளில் பங்கேற்க தேர்ச்சி பெற்று தமிழகத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவியை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார்.
மேலும், வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மாணவிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



Leave a Reply