ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆஸ்திரேலியா பிரிவு தொடக்க விழா சிட்னியில் நடைபெற்றது. விழாவிற்கு, எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி லட்சுமி நாராயணசுவாமி தலைமை தாங்கி மாணவர் சங்கத்தின் ஆஸ்திரேலியா பிரிவை துவக்கி வைத்து பேசினார். அப்பொழுது, கல்லூரியில் பல்வேறு காலகட்டங்களில் பயின்று சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெரா போன்ற பல்வேறு நகரங்களில் பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு பேசும் போது கல்லூரி, பல்வேறு துறைகளில் சிறப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்டார்ட்அப் தொழில்நுட்ப களங்களில் முன்னேறி இருப்பதை பட்டியலிட்டு கூறினார் . மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து நேரடியாகவும், காணொளி மூலமாகவும், இப்போது பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவியருக்கு தொழில்நுட்ப களங்களில் பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருப்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார்.
சென்ற ஐந்து வருடங்களில், கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பிரிவு அமெரிக்கா ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் துவக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக, முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வீணா ரமேஷ் ஆஸ்திரேலியா பிரிவு சங்கத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். ஆஸ்திரேலியா பிரிவின் தலைவர் நளினி சாந்தகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Leave a Reply