,

சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

coffin
Spread the love

கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு  தாக்கல் செய்வதற்கு சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

அவரை 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய போலீசார் சவப்பெட்டியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அவரை மட்டும் வேட்பமனு தாக்கல் செய்வதற்கு வருமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நூர் முகமது, “ஏற்கனவே 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்து விட்டதாகவும் தற்பொழுது 42-வது முறையாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன் .

ஜனநாயகம் இறந்துவிட்டது என்ன வலியுறுத்தி சவப்பெட்டி கொண்டு வந்த போது காவல்துறையினர் அதனை மடக்கி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ” என்று கூறினார்.