கோவில்களுக்குச் சென்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்திய காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமானார்.
காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் (55) அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கி இந்தியாவுக்கே ஆசி வழங்கினார்.
இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து கோயில்களுக்கும் சென்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தி வந்தார். இதனிடையே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Leave a Reply