கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை சார்பில் ‘சிங்க்ரானிக்ஸ் 2K24’ என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான தொழில்நுட்பப்போட்டிகள், கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
இதன் தொடக்கவிழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும்செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர் வி.சித்தார்த்தன் வரவேற்றார்.
கோயம்புத்தூர், ஐஎன்எஸ் அக்ரானியின் கல்வி அதிகாரி மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கேப்டன் டி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வினைக் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து பிராஜக்ட் எக்ஸ்போவை தொடங்கி வைத்தார். பின்னர், பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு இடையே பிராஜக்ட் எக்ஸ்போ, கனெக்ட்டோபியா, சர்க்யூட்டிபக்கிங், மீம்கிரியேஷன், கிரிக்கெட்ஏலம், மொபைல்கேமிங், பாஸ்&பிளே போன்ற தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் மின்னணுவியல் துறை மாணவத்தலைவர் எம்.அனிஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் வி.சதீஷ்குமார் மற்றும் மின்னணுவியல் துறைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
Leave a Reply