,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

ஜெயலலிதா
Spread the love

சென்னையில் அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்
செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் அதிமுகவினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்
தனர். சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, கே.பி முனுசாமி, செல்லூர் ராஜு, பொன்னையன் மற்றும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.