திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முருகன் சிலையை ஏந்தியும், கார்த்திகை தீபம் மற்றும் விளக்குகளைக் கையில் ஏந்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக வழக்கறிஞர் பிரிவு, சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு சட்ட மாணவர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஸ்ரீ ஆதித்யா மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளர் எஸ். மணிகண்டன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கையில் முருகன் சிலை மற்றும் கார்த்திகை தீபத்தை ஏந்தியவாறு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.



Leave a Reply