நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: சவரனுக்கு ரூ.2,360 சரிந்த தங்கம் விலை!

Spread the love

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 25) அதிரடியாகச் சரிந்து நகைப் பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,420-க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.165-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.