கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் (SNS) அகாடமியில் நடைபெற்ற 12-வது கென் ஐ கான் கராத்தே சாம்பியன்ஷிப் – 2026 போட்டியில், லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி (CBSE) மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் இப்பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, அனைவரும் பரிசுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர்கள் தங்களது கராத்தே திறமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். மாணவர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் மற்றும் பயிற்சியாளருக்கும், ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகம் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பள்ளியின் தலைவர் PMJF LION டாக்டர் K. கந்தசாமி கூறுகையில், “கல்வியுடன் விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எங்கள் பள்ளியின் நோக்கம். 12 மாணவர்களும் போட்டியில் பரிசு வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்” என்றார்.
மாணவர்களின் இந்தச் சாதனைக்குப் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply