மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் நம்பர் 1 பிராண்டான* ஹிமாலயா பேபிகேர், தனது ‘எக்ஸ்ட்ரா மாய்ஸ்சரைசிங் பேபி சோப்பிற்கான’ புதிய விளம்பரப் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளின் அன்றாட குளியல் முறையில் மாய்ஸ்சரைசிங் பராமரிப்பை இணைப்பதன் முக்கியத்துவத்தை இவ்விளம்பரம் முன்னிலைப்படுத்துகிறது. குளியல் என்பது தூய்மையாக்குவதற்கும் கூடுதலாக மட்டுமல்ல, குழந்தையின் வறண்ட மற்றும் மென்மையான சருமத்தைப் பராமரிப்பதும் என்பதை இது உணர்த்துகிறது; குழந்தையின் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும் அதே வேளையில், சுத்தப்படுத்துதலின் பங்கையும் இந்தப் பிரச்சாரம் வலுப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு தேவைப்படும் சருமப் பராமரிப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பெற்றோர்கள் எப்படி ஒவ்வொரு நாளும் குளிப்பாட்டும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த விளம்பர திட்டத்தின் நோக்கமாகும். ஹிமாலயா எக்ஸ்ட்ரா மாய்ஸ்சரைசிங் பேபி சோப் மூலம், குளியல் நடைமுறையிலேயே சுத்தப்படுத்துதல் மற்றும் ஈரப்பதமூட்டும் பராமரிப்பு ஆகிய இரண்டையும் இந்த பிராண்டு ஒன்றிணைக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில், வறண்ட சருமம் உள்ள குழந்தைகளுக்கு மிக வசதியான, மற்றும் சிறப்பான தீர்வை வழங்குகிறது.
குழந்தைகளின் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதிலும், குழந்தை பராமரிப்பு குறித்த ஆயுர்வேத அறிவியலின் ஈர்ப்புடன், இயற்கையின் நன்மைகளையும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆதரிக்கப்படும் பராமரிப்பையும் ஒருங்கிணைக்கும் சிறப்பான தயாரிப்புகளை உருவாக்குவதிலும் ஹிமாலயா பேபிகேர் எப்போதும் கவனம் செலுத்துகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காகத் தேர்ந்தெடுக்கும் தயாரிப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வுடனும், அக்கறையுடனும் இருக்கும் இக்காலத்தில், ஹிமாலயா பேபிகேர் வறண்ட மற்றும் மென்மையான சருமம் கொண்ட குழந்தைகளுக்காக, மிருதுவான, பாதுகாப்பான தீர்வுகளை வழங்கும் தனது தயாரிப்புகளின் தொகுப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
கற்றாழை மற்றும் பாலின் நன்மைகளால் செறிவூட்டப்பட்ட இந்த சோப், ‘ஆலோ-மில்க் மாய்ஸ்சர் காம்ப்ளக்ஸ்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது குளிக்கும் போது குழந்தையின் வறண்ட மற்றும் மென்மையான சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதன் மாய்ஸ்சரைசிங் பண்புகள், குறிப்பாக குளிர்காலத்தில் வறண்ட சருமம் கொண்ட குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றதாக இதனை மாற்றுகின்றன. மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட்ட இந்தத் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகள், பாரபென்கள் மற்றும் தாலேட்டுகள் இல்லை என்பதால், குழந்தைகளின் அன்றாட குளியல் பராமரிப்பிற்கு ஒரு மென்மையான, சிறந்த தீர்வை இது வழங்குகிறது.
இந்தத் தயாரிப்பு குறித்து, ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தின் பேபிகேர் பிரிவு இயக்குநர் திரு. சக்கரவர்த்தி N. V. அவர்கள் கூறுகையில், “பெற்றோர்களைப் பொறுத்தவரை, அன்றாட குழந்தை பராமரிப்பு என்பது தங்கள் குழந்தையின் சௌகரியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்கும் கவனமான தேர்வுகளைச் செய்வதாகும். எங்களின் எக்ஸ்ட்ரா மாய்ஸ்சரைசிங் பேபி சோப் மூலம், குழந்தையின் அன்றாட குளியல் நடைமுறையில் ஈரப்பதமூட்டும் பண்பியல்பை சேர்ப்பதன் மூலம் தூய்மையாக்கல் என்பதற்கும் கூடுதலான பராமரிப்பை வழங்குவதே எமது இலக்கு. குழந்தைகளின் மிருதுவான சருமத்திற்கு ஏற்றதாக கவனமாக உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதும், அன்றாட குழந்தை பராமரிப்பைப் பெற்றோர்களுக்கு எந்தச் சிரமமும் கவலையும் இல்லாத இனிய அனுபவமாக மாற்றுவது மீதான எமது அக்கறை தொடர்ந்து இருக்கும்,” என்று தெரிவித்தார்.
அன்றாட சருமப் பராமரிப்பிற்கான அதன் பிரத்யேக பேபிகேர் தயாரிப்புகளின் மூலம், ஹிமாலயா பேபிகேர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வுகளில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. மூலிகை ஆராய்ச்சியின் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பான, மென்மையான மற்றும் நம்பகமான பராமரிப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பின்புலத்துடன், இந்த பிராண்டு இயற்கையின் நன்மைகளை அன்றாட குழந்தை பராமரிப்பில் தொடர்ந்து வழங்கி வருகிறது.



Leave a Reply