விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் 4-வது மத்திய கவுன்சில் கூட்டம் – நவம்பர் 23-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது!

Spread the love

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் 4-வது மத்திய கவுன்சில் கூட்டம், வரும் நவம்பர் 23-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

கோவை ஆயிஷா மஹால் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் நிர்வாகிகள் கலந்துகொண்டு, நடைபெறவுள்ள மத்திய கவுன்சில் கூட்டம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இயக்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள், பெண்களின் முன்னேற்றம் மற்றும் அமைப்பின் வளர்ச்சி தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.