விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான விதிகளில் தமிழக அரசு அதிரடித் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், விளை நிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ளும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கை 9 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காகப் பொதுமக்கள் அல்லது நில உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய அந்த 9 அவசியமான ஆவணங்கள்:
-
கிரயம் அல்லது விற்பனைப் பத்திரம்
-
பட்டா நகல்
-
வடிகால் வரைபடம்
-
தள வரைபடம்
-
நில அமைப்பு வரைபடம்
-
500 மீட்டர் சுற்றுளவு வரைபடம்
-
அரசு, புறம்போக்கு நிலம் இல்லை என்பதற்கான சான்று
-
சிட்டா நகல்
-
அடங்கல் சான்று
இந்த புதிய திருத்தத்தின் மூலம் விவசாய நிலப் பயன்பாடு மற்றும் கட்டுமான அனுமதி தொடர்பான முறைகள் மேலும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.



Leave a Reply