கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“பெரியார் அறிவுலகம் என்பது மிகப்பெரிய சாதனை. பெரியார் கண்ட அறிவுலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் நம்முடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
எனது 84 ஆண்டுகால பொது வாழ்விலும் அரசியல் வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற்றதில்லை. நம் அனைவரின் வாழ்நாளிலும் இது மிக முக்கியமான நாள். இந்தச் சாதனைக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாறு இருக்கும்.
இது வெறும் நூலகம் மட்டுமல்ல; அறிவியலும் நிறைந்த அறிவுக் களஞ்சியம். மூடநம்பிக்கைகளுக்கு இடமளிக்காமல், பெரியார் கண்ட இனிவரும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சாதி, மதம், பேதம் இல்லாமல் அனைவரும் வந்து பயன்பெறும் இடமாக இது திகழும். அறிவுலகம் பரவட்டும்; அறியாமை நீங்கட்டும்.
இத்தகைய மகத்தான சாதனையை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார்; திராவிடம் வாழும்; அறிவுலகம் பெருகும்” என கி.வீரமணி தெரிவித்தார்.



Leave a Reply