தங்க நகைக் பிரியர்களுக்கு நிம்மதி பெருமூச்சு அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 30) தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாகச் சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வெள்ளியின் விலையும் சரிவைச் சந்தித்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.210-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,10,000-க்கும் விற்பனையாகிறது.
தீபாவளி நெருங்கும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை குறைவு நடுத்தர வர்க்கத்தினருக்கும் இல்லத்தரசிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.



Leave a Reply