பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Spread the love

கோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், கோயம்புத்தூர் மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

‘நால்சா டான்’ (NALSA DAWN – போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வு வழிகாட்டுதல் திட்டம்) திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்ரீதேவி தலைமை தாங்கி, மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்​றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/நீதிபதி ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *