தமிழக அரசின் வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு நெசவாளர்களுக்கு கூலி உயர்த்தி தர நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் டி எஸ் ஏ.சுப்ரமணியன், மாநில செயலாளர் பா.கந்தவேல் ஆகியோர் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் பொங்கல் 2027 இலவச வேட்டி திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 77 லட்சம் சலவை செய்யப் பட்ட வேஷ்டிகள், தங்க மற்றும் வெள்ளி நிற காப்பர் ஜரிகை கொண்ட சேலைகள் புதிய தரத்தில் புதிய திடத்தில் உற்பத்தி செய்து ரேஷன் பொருட்கள் வாங்கும் பொது மக்களுக்கு கொடுப்பதற்காக கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அரசாணை வெளியீடு செய்து ஆணை பிறப்பித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் இல வச வேஷ்டி சேலை உற்பத்தி தொடங்கப் பட்டு நடைபெற்று வருகிறது. விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் இலவச வேஷ்டி சேலை நெசவு கூலி உயர்வு நிர்ணயம் தொடர்பாக எங்களது தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பிக் ஒன்றுக்கு 18 பைசா வழங்க தொடர் கோரிக்கை எடுத்துரைத்ததில், எங்களது கோரிக் கையை பரிசீலனை செய்து வேஷ்டி உற்பத்திக்கு பிக் ஒன்றுக்கு 14பைசா விதம் வேஷ்டி ஒன்றுக்கு ரூபாய். 19.04 பைசா, இலவச சேலை உற்பத்திக்கு பிக் ஒன்றுக்கு 13 பைசா விதம் சேலை ஒன்றுக்கு ரூபாய். 45.76 கைத்தறி மற்றும் பெடல் தறி தறி நெசவாளர்களுக்கு நெசவாளர்களுக்கு கூலி கூலி உயர்வு வழங்கியும் நெசவு கூலி வழங்க ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர், கைத்தறி துறை முதன்மை செயலர், கைத்தறித்துறை இயக்குனர், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும்
நெசவாளர்களின் சார்பாக தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மகிழ்வுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Leave a Reply