கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 20-வது ஆண்டு பொதுமகாசபைக் கூட்டம், கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 250 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நகை உற்பத்தித் தொழிலின் தற்போதைய நிலை, தொழில் வளர்ச்சி மற்றும் உறுப்பினர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், சங்கத்தின் வளர்ச்சி மற்றும் நகை உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம் மற்றும் சங்க நிர்வாகிகள் வெங்கடேஷ், விக்னேஷ், சபரிநாத், நாகராஜ், அசோகன், ராஜேந்திர பிரபு, அம்மா வெங்கடேஷ், சஷ்டி வெங்கடேஷ், ரவிசங்கர், மணிகண்டன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
நகை உற்பத்தித் துறையின் முன்னேற்றத்திற்கும், சங்க உறுப்பினர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் தேவையான தொடர் நடவடிக்கைகள் குறித்து இந்தப் பொதுமகாசபைக் கூட்டத்தில் முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப்பட்டது.



Leave a Reply