மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: பிங்க் நிற ஒளியில் ஜொலிக்கும் கே.எம்.சி.ஹெச்.

Spread the love

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக் கட்டிடம் பிங்க் நிற ஒளியில் ஜொலிக்கிறது. அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, இந்த விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 5, 2026 வரை, தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், மார்பகப் புற்றுநோய் தொடர்பான மருத்துவ ஆலோசனைக் கட்டணத்தில் சலுகையும், மேமோகிராம் பரிசோதனைக்கு 50 சதவீதக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகின்றன.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சையின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க உதவும். மார்பகத்தில் அசாதாரண மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதுடன், மருத்துவர்களின் பரிந்துரைப்படி உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். பெண்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, ஆரம்பகாலக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி​ மற்றும் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் நடைபெறும் இந்த முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 74188 87411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பெறவும், உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.