கோவை முருகன் கோயிலில் 58 தேங்காய்கள் உடைத்து இந்து மக்கள் கட்சியினர் சிறப்பு வேண்டுதல்!

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்புகளை அமல்படுத்தி, வருகின்ற கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, கோவை காந்தி பார்க் முருகன் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் சிறப்பு வேண்டுதல் நடத்தினர்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநிலச் செயலாளர் சூர்யா மற்றும் செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நகரப் பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்து, 58 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர்.

மேலும், வருகின்ற கார்த்திகைத் தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்து, திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாகத் தனது கருத்துகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தார்.