சரசரவென சரியும் தங்கம்: இன்றைய ரேட் இதோ!

Spread the love
தங்க நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,560 வரை குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரங்கள், ரெப்போ வட்டி மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் மீதான முதலீடுகள் தற்போது சற்று குறைந்துள்ளன. இதன் நேரடித் தாக்கமாகவே விலையில் இந்தத் தொடர் சரிவு பதிவாகி வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,685-க்கும், சவரனுக்கு ரூ.280 சரிந்து ரூ.1,09,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.245 என்ற நிலையான விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது.