WorldSkills 2026 போட்டியில் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அசத்தல்

Spread the love

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான WorldSkills 2026 – Software Testing போட்டியில், கோவை ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர் Aswin S இந்தியா சார்பில் பங்கேற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு B.Tech பயிலும் Aswin S, செப்டம்பர் 22 முதல் 27-ம் தேதி வரை ஷாங்காயில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்றார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமையான போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், Software Testing துறையில் தனது தொழில்நுட்பத் திறனை Aswin வெளிப்படுத்தினார். சர்வதேச அளவிலான இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றது அவரது கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயணத்தில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.
அவரது தொழில்நுட்பத் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிர்வாகம், முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சர்வதேச போட்டியில் பங்கேற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள Aswin-ன் சாதனை, சக மாணவர்களும் தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஊக்கமளிக்கும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *