விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை முக்கிய அறிவிப்பு!

Spread the love

தமிழகத்தில் பயிர்ச் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவுத் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் ரொக்க விலையில் (Cash Sale) தரமான விதைகள் மற்றும் உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பயிர்ச் சாகுபடிப் பரப்பு மற்றும் நில ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பித்து, அதற்குரிய ரொக்கத் தொகையைச் செலுத்தி உரம் மற்றும் விதைகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் உள்ளீடுகளைத் தடையின்றிப் பெற்றுச் சாகுபடிப் பணிகளை விரைவுபடுத்துமாறு கூட்டுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.