,

விஜிஎம் மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி!

Spread the love

உலக இதய தினத்தை முன்னிட்டு, கோவையில் வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் நோக்கம், இதய ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த விழிப்புணர்வுப் பேரணி, ரேஸ்கோர்ஸ் – காஸ்மோபாலிட்டன் கிளப் கார்னரில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் நிறைவடைந்தது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், வி.ஜி.எம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் இதய ஆரோக்கிய விழிப்புணர்வு அமர்வு, உறுதிமொழி ஏற்கும் விழா, விழிப்புணர்வுப் பேரணி, இதயநோய் நிபுணர் டாக்டர் டி. தர்மராஜனின் சிறப்புரை மற்றும் உயிர்காக்கும் சிபிஆர் செயல்முறை விளக்க அமர்வு ஆகியவை இடம்பெற்றது. இந்த விழிப்புணர்வுப் பேரணியில், விஜிஎம் மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநரும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சுமன், எண்டோஸ்கோபி மற்றும் இரைப்பைக் குடல் மருத்துவ இயக்குநரான டாக்டர் மதுரா பிரசாத் சுமன், எண்டோஸ்கோபி மற்றும் இரைப்பைக் குடல் மருத்துவ இயக்குநரான டாக்டர் வம்சி மூர்த்தி, மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மருத்துவ இயக்குநரான டாக்டர் மித்ரா பிரசாத், இதயநோய் நிபுணர் டாக்டர் தர்மராஜன் மற்றும் விஜிஎம் மருத்துவமனையின் பிற சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் எஸ்.என்.எஸ் கல்லூரி, நேரு கல்லூரி, ஜே.கே கல்லூரி, டெக்ஸிட்டி கல்லூரி, பிஷப் ஆம்பிரோஸ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு செவிலியர் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர்.