,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 36வது ஆண்டு பொதுக்குழு மகாசபை கூட்டம்!

Spread the love

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 36 வது ஆண்டு பொதுக்குழு மகாசபை கூட்டம் பூண்டியில் உள்ள பாப்பிஸ் விஸ்டா ஹோட்டலில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்ரமணியன் தலைமை வகித்தார். சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி வரவேற்று பேசினார். சங்க பொதுச்செயலாளர் என். திருக்குமரன் 2025-2026ம் ஆண்டிற்கான பொதுச்செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்து பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி ரூ.36,891 கோடியாக உயர்ந்து 2.49% வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர். கோபாலகிருஷ்ணன் 2025-2026ஆம் ஆண்டிற்கான லாபகரமான வரவு-செலவு கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பை சமர்ப்பித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய வடிவமைப்புடன் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை, சங்கத்தின் தலைவர் கே. எம். சுப்ரமணியன் அறிமுகப்படுத்தி தனது தலைமை உரையில் பேசியதாவது:-
திருப்பூரின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 2025-26ஆம் ஆண்டில் சுமார் ரூ.46,000 கோடியை எட்டி, இதுவரையிலான உயர்ந்த ஏற்றுமதி செயல்திறனை பதிவு செய்துள்ளதாகவும், இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் சுமார் 55% பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.

உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள, திருப்பூர் பாரம்பரிய பருத்தி ஆடைகளுடன் செயற்கை இழை (MMF), தொழில்நுட்ப ஜவுளி, பெர்ஃபார்மன்ஸ் வேர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய வடிவமைப்புடன் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை, சங்கத்தின் தலைவர் கே. எம். சுப்ரமணியன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, ஆண்டுக்கு ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சி, சுற்றுச் சூழல் சமூக நிர்வாகம் (ESG), பெண் தொழில் முனைவோர், மற்றும் முதல் தலைமுறை இளம் தொழில் அதிபர் ஆகிய பிரிவுகளில் ஏற்றுமதியாளர்களுக்கு, ஒவ்வொரு பிரிவிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மொத்தம் 24 ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சங்க இணைச் செயலாளர் எம். ஆனந்த் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *