ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சார இருசக்கர வாகனப் போட்டி தொடக்கம்

Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சார இருசக்கர வாகன வடிவமைப்புப் போட்டி தொடங்கியது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியைத் தொடக்கி வைத்தார்.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே. டேவிட் ரத்னராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், மாணவர்களுக்கு தொழில்துறைப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில், கோவை குரோ ஐடெக், பெங்களூரு ஸ்கீமேட்டிக் இன்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நான்கு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 22 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 23 அணிகள் 1 கிலோவாட், 2 கிலோவாட் என இரு பிரிவுகளில் போட்டியிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *