நாடு முழுவதும் யுபிஐ (UPI) மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டண முறைகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் மீது எந்தவொரு கூடுதல் நிதியிய சுமையும் ஏற்றப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் (NPCI) புதிய நடைமுறையின்படி, ₹2,000-க்கு மேல் யுபிஐ மூலம் பணத்தைப் பெறும் வணிக நிறுவனங்களுக்கு 0.4 சதவீதம் Merchant Discount Rate (MDR) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு நிலையான கட்டணமாக ₹5-ம், பங்குச்சந்தை வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீதமும் கட்டணமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம்: தனிநபர் இடையேயான அன்றாட யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே தொடரும் என அரசு மறுஉறுதி அளித்துள்ளது.
மேலும், வணிகர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் இந்தக் கூடுதல் கட்டணங்களை மறைமுகமாகப் பொருட்களின் விலையை உயர்த்தியோ அல்லது கூடுதல் சேவைக் கட்டணமாகவோ நுகர்வோர் மீது திருப்புவது சட்டவிரோதச் செயலாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்குக் கடுமையான கண்காணிப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.



Leave a Reply