,

தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 244 பேருக்கு பாதிப்பு!

Spread the love

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.