தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வருகிற 06-10-2026 அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள்.
மதுராந்தகம் (தனி) தொகுதி: திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. ஐ. பரந்தாமன், பி.ஏ., பி.எல்., போட்டியிடுகிறார்.
தாராபுரம் (தனி) தொகுதி: வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்., போட்டியிடுகிறார்.
இவ்விரு தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கூட்டணிச் தோழர்களுக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் தலைமை அறிவுறுத்தியுள்ளது.



Leave a Reply