,

நற்றிணை பவுண்டேஷன் சார்பில் பாலியேட்டிவ் கேர் சென்டர் துவக்க விழா!

Spread the love

நற்றிணை பவுண்டேஷன் சார்பில், தீவிரமான மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும், கண்ணியமும், முழுமையான பராமரிப்பும் வழங்கும் வகையில் பாலியேட்டிவ் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா திருப்பூர் சிறுபூலுவப்பட்டி, ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள சக்தி நர்சிங் ஹோம் வளாகத்தில் நடைபெறுபெற்றது.

விழாவில் லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் Lion PMJF P.S. செல்வராஜ் (DT 3242 C)
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் Rtn. MD. K. பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

லயன் PMJF டாக்டர் K. கந்தசாமி (Majestic Exports) குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தார்.
விழாவிற்கு Rtn. MD. V. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
செயலாளர் K. நவநீதகிருஷ்ணனும் பொருளாளர் Rtn. MPHF. S. பாலச்சந்தர் அவர்களும் நிகழ்வை முன்னின்று நடத்தினார்கள்.

சக்தி நர்சிங் ஹோம் ஆதரவுடன் செயல்படும் பாலியேட்டிவ் கேர் சென்டர், நோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான ஆதரவு மற்றும் பராமரிப்பை இலாப நோக்கமற்ற சமூக சேவை முயற்சியாக செயல்படும்.

நற்றிணை பவுண்டேஷனின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பும் ஆதரவும் அளிக்க வேண்டும் என அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.