நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, ‘கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கோவைபுதூர் பாரூக் நகரைச் சேர்ந்த தோழர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர்களில் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார்.
இந்த நிலையில் “நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள், இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி? விழிப்பேன் என்று தெரியவில்லை” என மன வருத்தத்தோடு குறுஞ்செய்தி பதிவிட்டு விஷமருந்தி உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அன்பு மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றேன்.’’ இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித் துள்ளார்.
நீட் அச்சத்தால் மாணவி தற்கொலை – ஒரு கோடி வழங்க எஸ்.பி.வேலுமணி கோரிக்கை



Leave a Reply