எலான் மஸ்க் போல சிந்திக்க வேண்டும்- பார்க் பட்டமளிப்பு விழாவில் அண்ணாமலை பேச்சு

Spread the love

 

கோவை பார்க் என்ஜீனியரிங் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா நடந்தது. பிரேமா ரவி ஆடிட்டோரியத்தில் நடந்த இந்த விழாவுக்கு பார்க் கல்லூரி நிறுவனர் ரவி தலைமை தாங்கினார். பார்க் குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ‘வீ தி லீடர் ‘ அமைப்பின் தலைவர் அண்ணாமலை மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார். பின்னர், அவர் பேசியதாவது, ” மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து டிகிரி வாங்கியுள்ளீர்கள். முதலில் உங்களுக்கு ஒரு கைதட்டு. அடுத்து, தியாகம் செய்து உங்களை படிக்க வைத்த பெற்றோருக்கு ஒரு கைதட்டு. மூன்றாவதாக உங்களை உருவாக்கிய பேராசிரியர்களுக்கு ஒரு கைதட்டு. 1982ம் ஆண்டு டைம் இதழ் கம்ப்யூட்டர் படத்தை ‘ மிஷின் ஆப் தி இயர்’ என்று அட்டைப் படம் போட்டது. கம்ப்யூட்டர் நமது வாழ்க்கையை மாற்ற போகிறது என்று அப்போதே அந்த இதழ் சொன்னது.

2025ல் பட்டம் வென்றுள்ள உங்களுக்கு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட்தான் முக்கியமானது. ஏஐ உங்கள் வேலையை பறிப்பதாக சொன்னால் நான் நம்ப மாட்டேன். பட்டதாரிகள் ஏஐயை பயன்படுத்த தெரிந்து கொண்டால், வாழ்ந்து காட்டி விடலாம். ஏஐ நமது வேலையை பறிக்காது. ஏஐ- யை படித்துக் கொள்ள வேண்டும். ஏஐ நமது வாழ்க்கயை மாற்றி விடும். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கற்றுக் கொண்டே இருங்கள். எலான் மஸ்க்கிஸ் ஸ்பேஷ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. இத்தகையை மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எங்களுடைய நம்பிக்கை ஆசை எல்லாம், நீங்கள் எங்களைப் போல சிறியதாக சிந்திக்க கூடாது. எலான் மஸ்க் போல நீங்கள் பெரியதாக சிந்திக்க வேண்டும். இந்தியாவைத் தாண்டி பரந்து விரிந்த எண்ணத்தோடு வெளியே காலடி எடுத்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *