நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலில் ஈடுபடப் போவதாக பரவலாக தகவல் உள்ளது. முதல்வர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் திரிஷா போட்டியிடப்போவதாக சொல்லப்பட்ட நிலையில், ராகவா லாரன்ஸ் களமிறங்கப் போவதாக சொல்கிறார்கள். இது தொர்பாக லாரன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” தற்போது பென்ஸ் படபிடிப்பில் பிசியாக இருக்கிறேன். படபிடிப்பு முடிந்ததும் வரும் 11ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இதனால், தமிழக அரசியலில் மற்றொரு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் யார்?
ராகவா லாரன்ஸ் ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தவர். தமிழ்படத்தில் நடன இயக்குநராக 1993ம் ஆண்டு அறிமுகமானார். 1999ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்க தொடங்கினார். நடிகர், இயக்குநர், கதாசிரியர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர். விஜய் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான திருமலை படத்தில் சிறப்பு ரோலில் நடித்துள்ளார். அப்போதிருந்து, இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. 2012ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் ரிபெல் படத்தை இயக்கியுள்ளார். 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா அவருக்கு நல்ல புகழை பெற்றுக் கொடுத்தது. 2020ம் ஆண்டு முனி 2: காஞ்சனா படத்தை லட்சுமி என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். இந்த படத்தில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்திருந்தார்.
ராகவா லாரன்ஸ் செய்த பணிகள் என்ன?
ராகலா லாரன்ஸ் தனது சமூகநலப்பணிகளுக்ககா பரவலாக அறியப்பட்டவர். 2015ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி ஆயிரக்கணக்கானோருக்கு உதவி வருகிறார். இவரது, அறக்கட்டளைக்கு பலரும் பணம் அனுப்பத் தொடங்கினர். அப்போது, நன்கொடையாளர்கள் யாரும் பணம் அனுப்ப வேண்டாம். எனது சொந்தப் பணத்தில் இருந்து உதவி செய்யுமளக்கு தனக்கு வருவாய் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தவர். தனது ‘மாற்றம் ‘அறக்கட்டளை வழியாக விவசாயிகளுக்கு நவீன கருவிகள் வாங்க, மாணவர்கள் உயர்கல்வி படிக்கவும் ராகவா லாரன்ஸ் உதவி வருகிறார்.
ராகவா என்ற பெயர் வந்தது எப்படி?
நடிகர் ராகவா லாரன்ஸ் 1976ம் ஆண்டு பிறந்தவர். லாரன்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தையாக இருந்த போது , அவருக்கு தலையில் கட்டி இருந்துள்ளது. ராகவேந்திர சாமியின் அருளால் கட்டி குணமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து , திரைத்துறையில் வளர்ந்த பின்னர், 2001ம் ஆண்டு தனது பெயருக்கு முன்னால்’ ராகவா ‘ என்ற பெயரையும் இணைத்துக் கொண்டார். திருமுல்லைவாயலில் ராகவேந்திரசாமி பிருந்தாவன் என்ற பெயரில் கோயில் ஒன்றையும் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ளார்.



Leave a Reply